×

வேலை செய்யாமல் இருப்பது எப்படி? சினிமா ஒண்டிப்புலி தெரியும் தீப்பொறி நாயை தெரியுமா? ரசிகர் மன்றத்தில் 95,000 பேர்

ரோம்: ஒரு வேலையும் செய்யாமல் சுற்றித்திரிபவர்களை, வீட்டில் உள்ள பெரியவர்கள் சோம்பேறி நாய்னு திட்டுவதை கேட்டிருப்போம். ஆனால், சுறுசுறுப்புக்கு பெயர் போன இனமான நாய் வகையில், மிக சோம்பேறியான ஒரு நாய் இத்தாலியில் இருக்கிறது. இந்த சோம்பேறி நாயை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்கள் 95,000 பேர் என்றால் நம்ப முடிகிறதா? இத்தாலியின் பிரெஸ்சியா நகரைச் சேர்ந்தவர் சில்வியோ சியாமோ. இவர் மினி புல் இனத்தைச் சேர்ந்த (பார்ப்பதற்கு மாட்டு தலை போன்ற தலையை கொண்டது) நாயை வளர்த்து வருகிறார். இதன் பெயர் ஸ்பார்கி (தீ்ப்பொறி). ஆனால், .உலகத்திலேயே அட்ட சோம்பேறி என்றால் இந்த தீப்பொறிதான். இவருக்கு மற்ற நாய்களை போல், உரிமையாளர்களுடன் வாக்கிங் செல்வது பிடிக்காது, வீட்டை பாதுகாத்துக் கொண்டு வாசலில் இருப்பது போன்ற செயல்கள் எல்லாம் அறவே பிடிக்காது.

தீப்பொறிக்கு பிடித்த ஒரே விஷயம், வீட்டில் உள்ளவர்களின் அனைப்பில் அசந்து தூங்குவது. யாராவது தூக்கிக் கொண்டால் போதும், அவர்களின் பிடியிலேயே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிடுவார். அப்புறம் தப்பித்தவறி வாக்கிங், கீங்கிங் என்று கூட்டிக் கொண்டு போய்விட்டால் போச்சு... நடுரோட்டில் மல்லாக்க படுத்துக் கொண்டு மட்டையாகி விடுவார். இவரது உரிமையாளர் சில்வியோ, தீப்பொறியின் சோம்பேறி செயல்களை பார்த்து அதற்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பக்கத்தை உருவாக்கினார். இப்போது தீப்பொறியை பின்பற்றுபவர்கள்... அதிகம் இல்லை ஜென்டில்மேன் 95,000 பேர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பொறியை, சில்வியோ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு அழைத்து சென்றார். நமது தீப்பொறியாருக்குத்தான் நடப்பது என்பதே பிடிக்காதே... அதனால் அப்படியே காலை நீட்டி சோம்பல் விட்டது.

‘‘நீ வேணா... போ... என்னால எல்லாம் நடந்து உள்ள வர முடியாது...’’ என்பதுபோல் அவரது உரிமையாளரை பார்க்க, அவர் கடுப்பாகி, அதன் கழுத்துப்பட்டையை பிடித்து இழுக்க பார்த்தார். ஆனால், தீப்பொறி அதே காலை நீட்டிய பாணியிலேயே உரிமையாளர் வசம் சறுக்கியது. ‘‘ஹை... ஜாலி... ஜாலி... உரிமையாளரே... நீ அப்படியே இழுத்துட்டுப்போ... நான் அப்படியே சறுக்கிட்டு வர்றேன்...’’ என்ற பாணியில் அவரை பார்த்து குலைத்தது. இதனால் சில்வியோ அதை இழுத்துக் கொண்டு செல்ல... சறுக்கிக் கொண்டே தீப்பொறி சென்ற காட்சிதான் இப்போது இன்டர்நெட்டில் பிரபலம். கடையில் பக்கத்தில் செல்லும் ஒருவர் நாயை பார்க்க, ‘‘ஹலோ... பாஸ்.... வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்பா....’’ என்பதுபோல் அவரை பார்த்துக் கொண்டே சறுக்கிக் கொண்டே செல்கிறது தீப்பொறி. டேய் தீப்பொறி உனக்கு முன்னாடியே... எங்க ஊருல சினிமா ஒண்டிப்புலியை பார்த்துட்டோம்டா என்கிறீர்களா.... அதுவும் சரிதான்.



Tags : Cinema Ondipuli Know ,fan club , Work, Cinema, Ondipuli, Dog, Corona, Curfew
× RELATED விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி குத்திக்கொலை: தந்தை, மகன் கைது : ஒருவருக்கு வலை